மெக்சிகோவை மிரள வைத்த ஓடிஸ் புயல் - 25 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


பசிபிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா தளமான அகாபுல்கோவை ஓடிஸ் புயல் கடுமையாக தாக்கியுள்ளது. சுமார் 10 லட்சம் பேர் வாழ்கின்ற இந்தப் பகுதியில் மணிக்கு 230 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. 

இந்த புயலால், வீடுகள், மின்கம்பங்கள், வாகனங்கள், மரங்கள், மொபைல் டவர்கள் உள்ளிட்டவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஓடிஸ் புயல் விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை. விவசாயிகளின் மக்காச்சோள பயிர்கள் முற்றிலும்  நாசமாகிவிட்டன. 

புயலால் உருக்குலைந்த அகாபுல்கோ நகரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர அதிகாரிகள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.ஓடிஸ் புயல் உருவான 12 மணி நேரத்திற்குள் கரையை கடந்ததனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரம் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரைக்கும் ஓடிஸ் புயல் தாக்குதலில் அகாபுல்கோவில் 27 பேர் உயிரிழந்தனர். புயல் கரையை கடந்த பகுதிகளில் தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல், மின்கம்பங்கள் அனைத்தும் விழுந்து விட்டதால், மின் விநியோகம் சீராக சில நாட்களாகும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 peoples died otis cyclone in mexico


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->