சோமாலியாவில் சோகம்: பழைய வெடிகுண்டு வெடித்ததில் 27 சிறுவர்கள் பலி..! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் லோயர் ஷபெல்லே மாகாணத்தில் முரலே கிராமத்தில் ஏராளமான சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் 27 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

மேலும் 53 சிறுவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்தை ஆய்வு செய்த பாதுகாப்பு படையினர், உள்நாட்டு போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத பழைய ஷெல் குண்டை வைத்து சிறுவர்கள் விளையாடியதில் விபரீதம் ஏற்பட்டதுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஜனாலே மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும் பயன்படுத்தப்படாமல் மண்ணில் புதைந்த குண்டுகளை அகற்றுமாறு அரசாங்கத்தையும், உதவி நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாக துணை மாவட்ட ஆணையர் அபி அகமது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உள்நாட்டுப் போரால் கடும் பாதிப்படைந்த சோமாலியாவில் தற்போது இந்த வெடிகுண்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27 childrens died as old bomb blast while playing in somalia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->