வடகொரியாவின் அச்சுறுத்தல்: போர் பயிற்சியை முறைப்படுத்த 3 நாடுகள் தீவிரம்.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாளான வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரிய எல்லை பகுதிகளில் எப்போது வேண்டுமானாலும்.போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஐ.நா ஏவுகணை சோதனைகளை நிறுத்த வலியுறுத்தியும், அதை பொருட்படுத்தாமல் வடகொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரிய தீப கற்பத்தில் பாதுகாப்பு சூழ்நிலைகளை பரிமாறிக் கொள்ளவும், முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும், வாஷிங்டனில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மூன்று நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும், பதிலடி கொடுப்பதற்கும் மூன்று நாடுகளின் ஏவுகணை பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்புப் பயிற்சிகளை முறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மீண்டும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பயம் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டால் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 countries keen to formulaize exercise as north Korea missile threat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->