புர்கினா பாசோ || வாகனத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.! 35 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


புர்கினா பாசோவில் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவின் போர்சங்கா-டிஜிபோ நெடுஞ்சாலையில் தலைநகர் ஓகாடவ்கோ நோக்கி பொதுமக்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் திடீரென குண்டு வெடித்துள்ளது.

இதையடுத்து இந்த குண்டு வெடிப்பு குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிறுத்தைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில் பெண்கள் உட்பட 35 பேர் பலியாகி உள்ளனர். 37-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், அல் கொய்தா மற்றும் டேஷுடன் தொடர்புடைய குழுக்கள் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

35 died in bomb blast in vehicle in Burkina faso


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->