வெளுத்து வாங்கிய கனமழை! வீடு இடிந்து விழுந்து இதுவரை 35 பேர் பலி!
35 people have died due to heavy rains in Afghanistan
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 35 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் மற்றும் நங்கர்ஹர் மாகாணத்தில் மரங்கள், சுவர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 230 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மழையினால் காலமடைந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தலிப்பான் அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம். பாதிக்கப்பட்டவர்களை மூகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறது.
கடந்த மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாக்கினர். மேலும் விவசாய நிலங்களும் சேதமாகின. காலநிலை மாற்றத்தால் நடைபெறும் சம்பவங்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆளாகி வருவது குறிப்பிடதக்கது.
English Summary
35 people have died due to heavy rains in Afghanistan