அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - எகிப்தில் 35 பேர் பலியான கொடூரம்.! - Seithipunal
Seithipunal


எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியா நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் சென்ற கார்கள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி நேற்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணியர் பேருந்து உட்பட மற்ற வாகனங்களும் சேதமாகியது.

வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

எகிப்தில் சாலைகள் பெரும்பாலும் மோசமான நிலையில் உள்ளன மற்றும் நெடுஞ்சாலை குறியீடு பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. இதனால் அங்கே அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எகிப்தில் விபத்து நடப்பது சகஜமானவை தான்.

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது பேருந்து மோதியது தான் அடுத்தடுத்த வாகனங்கள் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவகணத்தில் ஏற்பட்ட பெட்ரோல் கசிவு காரணமாக மற்ற வாகனங்களுக்கும் தீ பரவியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

35 peoples died accident in egypt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->