இஸ்ரேல் நடத்திய தாக்குதல்.. 35 பேர் பலி.. தவறை ஒப்புக்கொண்ட பிரதமர்..!! - Seithipunal
Seithipunal


பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து, தொடர்ந்து பாலஸ்தீன தலைநகர் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தின் ரஃபா என்ற நகரை மட்டும் விட்டு விட்டு மற்ற அனைத்து பகுதிகளையும் முற்றிலுமாக அழித்துவிட்டது.

இந்த போர் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தொடுக்கப்பட்ட போர். இதன் இலக்கை அடைய ரஃபா நகரின் மீதும் தாக்குதல் நடத்த வேண்டும் என்று இஸ்ரேல் அறிவித்தது. அதற்கு உலகின் பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஐ. நா. வும் இஸ்ரேலின் இந்த முடிவை எதிர்த்தது.

இந்நிலையில் தான் நேற்று திடீரென எந்தவித அறிவிப்புமின்றி ரஃபா நகர் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

உலக நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்ததையடுத்து இஸ்ரேல் பிரதமர், "ரஃபா தாக்குதலில் 35 பேர் இறந்தது எதிர்பாராதது. இது ஒரு துரதிர்ஷ்டமான தவறு. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

35 peoples died in Isreal Paalastine War


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->