பெரும் அதிர்ச்சி! பழங்குடியினர் இடையே வெடித்த வன்முறை! 36 பேர் பலி! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே வெடித்த வன்முறையில் இதுவரை 36 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லை பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் அமைந்துள்ள போஷேரா கிராமத்தில் உள்ள இரண்டு தரப்பு பழங்குடியினருக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.

வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்கள் இடையே வெடித்த மோதல் ஐந்து நாட்களாக நடந்து வருகிறது. போஷேரா, மலிகேல், தண்டர் உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் இஸ்லாமிய பிரிவை பின்பற்றும் பழங்குடியினருக்கு சன்னி பிரிவை பின்பற்றும் பழங்குடியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் வெடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரண்டு தரப்பிற்கும் இடையே அரசு நடத்திய பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் திரும்பி நிலையில் தற்போது திடீரென நான்கு நாட்களாக திடீர் மோதல் வெடித்து தற்போது அது வன்முறையாக மாறி உள்ளது.

துப்பாக்கிகள், ராக்கெட், லாஞ்சர்கள் என நவீன ஆயுதங்களை பயன்படுத்தி இரண்டு தரப்பு சண்டையிட்டு வருவது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த வன்முறையில் இதுவரை 36 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் 162  பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

வன்முறையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிரமாக  நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கலவரம் நடக்கும் இடத்தில் பாதுகாப்பு படையினர் கலவரத்தை கட்டுப்படும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

36 people have been killed so far in the violence that broke out between the tribes in Pakistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->