ஆளில்லா விமானத்தின் ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு இஸ்ரேல் வீரரர்கள் 4 பேர் பலி! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைடைவந்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டு உள்ள சமூக வலைத்தள பக்கத்தில், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஏவிய ஆளில்லா விமானம் ராணுவ தளத்தின் மீது தாக்கியதாகவும், இந்த சம்பவத்தில், இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்கள் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் துயரை ராணுவம் பகிர்ந்து கொள்வதாகவும்,  அவர்களுக்கு தொடர்ந்து இஸ்ரேல் அரசு உறுதுணையாக இருக்கும் என்றும், காயமடைந்த நபர்களின் பெயர்களை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல், அவர்களின் குடும்பத்தினரை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 Israel soldiers killed in hezbollah drone attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->