#மெக்சிகோ | அகதிகள் மையத்தில் பயங்கர தீ விபத்து - 40 பேர் பலி
40 died as fire in regufee center in america mexico border
மெக்சிகோவின் வடக்கு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சியுடாட் ஜுவாரெஸ் பகுதியில் தேசிய அகதிகள் தடுப்பு மையம் அமைந்துள்ளது. இதில் வெனிசுலா, குவாத்தமாலா, நிகரகுவா உள்ளிட்ட மத்திய மற்றும் தென் அமெரிக்காவை சேர்ந்த 40 வயதிற்கும் மேற்பட்ட 68 ஆண்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு அகதிகள் மையத்தில் எதிர்பார்த்த விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய குடிவரவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இறந்தவர்களில் 28 பேர் குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 10 பேர் வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் குவாத்தமாலா மற்றும் வெனிசுலாவின் இடம்பெயர்வு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட தகவலில், தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும், விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
40 died as fire in regufee center in america mexico border