இங்கிலாந்து மன்னர் பிறந்த நாள் விழாவில் 40 இந்தியர்களுக்கு கவுரவ விருது...!
40 Indians honored on England King Charles birthday
கடந்த ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப்பின் இளவரசர் 3ஆம் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக முடி சூட்டப்பட்டார். இதையடுத்து நாடு முழுவதும் மன்னருக்கு பெரும் வரவேற்பும், மரியாதையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸின் 75 வது பிறந்தநாள் வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதற்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்புகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது 3ஆம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்ற பின் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் இதுவாகும். இந்நிலையில் இங்கிலாந்து மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுநல துறைகளான கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான 1171 பெயர் கொண்ட பட்டியலை இங்கிலாந்து அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் 52 சதவீதமும், சிறுபான்மையினர் 11 சதவீதமும் அடங்குவர். மேலும் இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கல்வி ஆய்வாளர்கள், டாக்டர்கள் மற்றும் சமூக நல ஆர்வாளர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு கௌரவ விருது வழங்கப்படவுள்ளது.
இந்த பட்டியலில் பேராசிரியர் புரோகார் தாஸ்குப்தா, தொழிலதிபர் அனுஜ் சண்டே மற்றும் ஹினா சோலங்கி,டாக்டர் பர்விந்தர் கவுர் அலே, பல்வீர் மோகன் பல்லா, வணிக ஆய்வாளர் ரேகேஷ் சவுகான், கைலாஷ் மல்ஹோத்ரா, பல்பீர் தில்லான் ஆகியோர் உள்ளனர்.
English Summary
40 Indians honored on England King Charles birthday