நடுக்கடலில் தீப்பிடித்து எறிந்த படகு - 40 அகதிகள் பலி.! - Seithipunal
Seithipunal


ஹைதி நாட்டில் இருந்து துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் என்ற தீவை நோக்கி அகதிகள் சிலர் படகில் புறப்பட்டனர். அப்போது திடீரென படகு தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில், 41 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் விரைந்துச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக சர்வதேச அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் கிரிகோயர் குட்ஸ்டீன் தெரிவித்ததாவது:- 

 

"ஹைதி நாட்டில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடு மற்றும் புலம்பெயர்வதற்கான சட்டப்பூர்வ வழிகள் இல்லாததால், இதுபோன்ற சோக சம்பவங்கள் ஏற்படுவதற்கான காரணிகளாக உள்ளன.

ஹைதி நாட்டிலும் சமூக மற்றும் பொருளாதார நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வரும் தீவிர வன்முறை சம்பவங்களால், அவர்களின் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. சுகாதார வசதியின்மை, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை, சமீபத்திய வன்முறை உள்ளிட்டவற்றால் இதுபோன்ற ஆபத்து நிறைந்த பயணங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகின்றனர்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

40 migrants death in haithi country for boat fire accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->