பிலிப்பைன்ஸை தாக்கிய நால்கே புயல்.! வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 42 பேர் பலி
42 died in severe flood and landslide in Philippines due to nalgae typhoon
தென் கிழக்கு ஆசிய பகுதியில் உருவான நால்கே புயலால் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் சமர் மற்றும் மின்டானாவோ பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏராளமான குடியிருப்பு பகுதிகள், கடலோர நகரங்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதுவரை 5000-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
English Summary
42 died in severe flood and landslide in Philippines due to nalgae typhoon