கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ.! 45000 ஏக்கர் காடுகள் நாசம்..! - Seithipunal
Seithipunal


வட அமெரிக்கா நாடான கனடாவில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காட்டுத்தீ கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் நகரங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் ஒரு மில்லியன் ஹெக்டருக்கு அதிகமான வனப்பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அதீத வெப்பநிலை காரணமாக மேற்கு பகுதிகளில் 431 இடங்களில் தீ பற்றியுள்ளது. இவற்றில் 10 இடங்களில் தீயை அணைத்த போதிலும், 11 இடங்களில் புதிதாக தீ பற்றியுள்ளது. மேலும் அடுத்தடுத்த இடங்களில் வேகமாக தீ பரவுவதால் தீயை அணைப்பதில் தீயணைப்பாளர்களுக்கு கடும் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது. இதுவரை இந்த காட்டுத்தீயால் 45,000 ஏக்கர் காடுகள் சேதம் அடைந்துள்ளன.

இதைத்தொடர்ந்து 600க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், டஜன் கணக்கான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நிலையற்ற காலநிலை, மோசமான காற்று மற்றும் அதிக வெப்பம் காரணமாக காட்டு தீ தொடர்ந்து பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

45000 hectres forest destroyed as Wildfire ravages in Canada


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->