நாடெங்கும் குண்டு மழை.. மத்திய அரசின் "ஆப்ரேஷன் காவேரி"..சூடானில் இருந்து 500 இந்தியர்கள் மீட்பு..!! - Seithipunal
Seithipunal


ஆப்ரேஷன் காவேரி என்ற பெயரில் சூடான் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது. சூடானில் 3000 முதல் 4000 இந்தியர்கள் சிக்கி இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தற்பொழுது 500 இந்தியர்களை இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் சுமேதாவில் ஏற்றி சூடானிலிருந்து சவுதி அரேபியாவுக்கு கொண்டு செல்லும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் கெத்தா விமான நிலையத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த இரண்டு சி130.ஜெ பெரிய ரக போக்குவரத்து விமானம் தயார் நிலையில் உள்ளது. அந்த விமான மூலம் 500 இந்தியர்களும் இந்தியா கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மேலும் சூடான நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை போர்ட் சூடான் என அழைக்கப்படும் சூடான் நாட்டின் துறைமுகத்திற்கு வரும்படி இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியர்கள் சூடான் நாட்டு துறைமுகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். 

அவ்வாறு வரும் இந்தியர்கள் அருகில் உள்ள பள்ளிகள் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டு அங்கிருந்து இந்திய போர்க்கப்பல் மூலம் சவுதி அரேபியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு படிப்படியாக சூடான் நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்கும் பணியில் இந்திய வெளியுறவு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்தியர்களின் புகைப்படத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் இந்திய போர்படை கப்பலான சுமேதாவில் ஏற்றப்பட்டு அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட உள்ளனர். 

அங்கிருந்து அவர்கள் அனைவரும் இந்திய போர் விமான மூலம் தாயகத்திற்கு திரும்ப உள்ளனர் என வெளியூர் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

500 Indians rescued from Sudan in Operation cauvery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->