2024 -க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை - மத்திய நிதியமைச்சர் பேச்சு..!
5g network 2024 come in all india finance minster speech
கடந்த சில நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது, அண்மையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 5ஜி சேவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அந்தக் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது, "பிரதமர் மோடி, இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த 5ஜி சேவை 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் வந்து விடும். இந்த சேவை இன்னும் பொதுமக்களை சென்றடையவில்லை.
இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்த சேவை முற்றிலும் தனித்துவம் மிக்கது. இதற்கான சில பாகங்கள் மட்டும் தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் எந்த நபரிடம் இருந்தும் வரவில்லை.
எனவே 5ஜி தொழில்நுட்பம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல. எங்களது சொந்த தயாரிப்பு. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. வேறு நாடுகள் இந்த சேவையை விரும்பினால், அவற்றுடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். 5ஜி விஷயத்தில், இந்தியாவின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம்" என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
5g network 2024 come in all india finance minster speech