#காபூல் | வெளியுறவு அமைச்சகம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் - 6 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவு அமைச்சகம் அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, பயங்கரவாத இயக்கங்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் பால்க் மாகாணத்தின் தலிபான் ஆளுநர், தற்கொலை படையால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், வெளியுறவு அமைச்சகம் உட்பட பல அரசாங்க கட்டிடங்களைக் கொண்ட சாலையில் காவல்துறையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சோதனைச் சாவடியில் சந்தேகத்திற்குரிய நபர் வேகமாக வருவதை கண்ட போலீசார் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதையடுத்து அந்த மர்ம நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலை படை தாக்குதலில் 6 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். குழந்தை மற்றும் பாதுகாப்பு படையினர் உட்பட 12 படுகடுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு படையினர் கூறும்பொழுது, இந்த தாக்குதல் இந்த வருடத்தின் இரண்டாவது தற்கொலை படை தாக்குதல் எனவும், இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த தாக்குதலை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 died as suicide blast in Kabul near foreign ministry in Afghanistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->