நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி.!! எவரெஸ்ட் சிகரத்தை காண சென்ற போது சோகம்.!! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மனாங் ஏர் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் இன்று காலை திடீரென மாயமானது. இன்று காலை 10.12 மணிக்கு ஹெலிகாப்டர் ரேடாரின் தொடர்பை இழந்து காணாமல் போனது. இந்த நேபாள ஹெலிகாப்டரில் 5 மெக்ஸிகோ பயணிகள் மற்றும் விமானியுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பயணம் செய்துள்ளனர்.

மூத்த விமானி சேட் பி குருங் என்பவர் ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார். இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் உள்ள சுர்கியிலிருந்து தலைநகர் காத்மாண்டுக்கு காலை 9:45 மணிக்கு புறப்பட்டதாக நேபாள விமான போக்குவரத்து ஆணைய தகவல் அதிகாரி ஞானேந்திர பூல் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உலகின் மிக உயரமான சிகரத்தை சுற்றிப் பார்க்கச் சென்று இன்று காலை காத்மாண்டுவிற்கு திரும்பும் வழியில் லிக்கு என்ற இடத்திற்கு அருகில் ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. நேபாளத்தில் மோசமான வானிலை நிலவுவதால் ஹெலிகாப்டர் வழித்தடம் மாற்றி வேறு பாதையில் இயக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி சாகர் கேடல் தெரிவித்துள்ளார்.

சொலுகும்பு மாவட்டத்தில் உள்ள லிகுபிகே கிராமப்புற நகராட்சியின் லம்ஜுரா பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரிய வந்ததை அடுத்து மீட்பு படையினர் விரைந்தனர். ஹெலிகாப்டரை உள்ளூர்வாசிகள் கண்டுபிடித்தாக கிராமப்புற நகராட்சி துணைத் தலைவர் நவாங் லக்பா என்பவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர் மலை மேல் உள்ள மரத்தில் மோதியது விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

எவரெஸ்ட் சிகரம் அருகே விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் இருந்த 5 வெளிநாட்டினர் மற்றும் விமானி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 மெக்ஸிகோ சுற்றுலா பயணிகளின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 killed in Nepal helicopter crash


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->