சூடானிலிருந்து 3 இந்தியர்கள் உட்பட 66 பேர் மீட்பு - சவுதி அரேபியா நடவடிக்கை - Seithipunal
Seithipunal


வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சூடானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்க இந்தியா, சவுதி அரேபியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தூதரகம் வாயிலாக முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, சவுதி அரேபியா விமானங்கள் மூலம் தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பொழுது நட்பு நாடுகள் மற்றும் சகோதர நாடுகளை சேர்ந்த மக்களையும் மீட்டு வருகிறது. இதையடுத்து 12 நாடுகளைச் சேர்ந்த 66 பேர் சூடானிலிருந்து மீட்கப்பட்டு சவுதி அரேபியாவின் நகரமான ஜெட்டாவை அடைந்ததாக சவுதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்டவர்களின் 3 பேர்கள் இந்தியர் என்றும், அவர்கள் சவுதி அரேபியா விமான ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை சூடானிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி அரேபிய பிரதமர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத்துடன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

66 people including 3 indians Saudi Arabia evacuated from sudan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->