துனிசியாவில் அடுத்தடுத்து அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி, 67 பேர் மாயம்.! - Seithipunal
Seithipunal


மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை, உள்நாட்டு போர் மற்றும் வேலையின்மை ஆகிய காரணங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலி, கிரீஸ் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு 2022ல் மட்டும் இத்தாலிக்கு 1300 பேர் மற்றும் இந்த ஆண்டு துனிசியாவிலிருந்து 12,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று துனிசியாவிலிருந்து அகதிகளுடன் இத்தாலி புறப்பட்ட படகு மத்திய தரைக்கடலை கடக்கும் பொழுது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த கடலோர காவல் படையினர் கடலில் தத்தளித்த 84 பேரை மீட்டு மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், பச்சிளம் குழந்தை உட்பட 33 பேர் காணாமல் போய் உள்ளதாகவும் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். துனிசியாவில் கடந்த 2 நாட்களில் நடந்த 5வது அகதிகள் படகு விபத்து இதுவாகும். இதுவரை இந்த விபத்துகளில் 7 பேர் உயிரிழந்ததாகவும்,67 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 died and 67 missing as refugees boats capsizes in tunisia


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->