மியான்மரில் 7 மாணவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஐநா குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


மியான்மரில் கடந்த ஆண்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக கட்சி தலைவர் ஆங் சான் சூகியின் அரசை கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதிலிருந்து ராணுவ ஆட்சிக்கு எதிரானவர்களை ஒடுக்குவதற்கு மரண தண்டனையை ஒரு ஆயுதமாக மியான்மர் ராணுவம் பயன்படுத்தி வருவதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் யாங்கூனை தளமாகக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு அந்த நாட்டு ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த மாணவர்கள் அனைவரும் கடந்த ஏப்ரல் மாதம் வங்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் நியாயமான விசாரணையின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறியும், சுதந்திரம் மற்றும் பாரபட்சமின்மைக்கான முக்கிய நீதித்துறை உத்தரவாதங்களுக்கு முரணாக இராணுவம் இரகசிய நீதிமன்றங்களில் நடவடிக்கைகளைத் தொடர்கிறது என்றும், மாணவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது பழிவாங்கும் செயல் என்று வோல்கர் டர்க் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 university students sentenced to death in Myanmar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->