12 வயது சிறுமியை கரம் பிடிக்க முயன்ற 72 வயது முதியவர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!  - Seithipunal
Seithipunal


நமது அண்டை மாநிலமான பாகிஸ்தானில் குழந்தை திருமணங்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் உள்ளது. இருபினும் முதியவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 

அந்த வகையில், ஆலம் சையது என்ற நபர், தனது 12 வயது மகளை 72 வயது முதியவர் ஆன ஹபீப் கான் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்துள்ளார்.

இதையடுத்து அந்த முதியவர் சிறுமியை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கிருந்த சிறுமியின் தந்தை அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

இதைத் தொடர்ந்து போலீசார் முதியவரை கைது செய்தனர். பின்னர் முதியவர் மற்றும் திருமண நிகழ்ச்சியை நடத்தி வைக்க முயன்ற நபர் ஆகியோருக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

72 years old man get married to 12 years old girl in pakisthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->