நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்து.! 76 பேர் உயிரிழப்பு.!
76 killed in Boat capsizes in Nigeria
நைஜீரியாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக படகு கவிழ்ந்த விபத்தில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
கினியா வளைகுடாவில் உள்ள ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அனம்பிரா மாகாணத்தில் உள்ள ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. அப்பொழுது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் படகில் இருந்தவர்கள் அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதில் 76 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்த மீட்பு மற்றும் நிவாரண பணி குழுக்களை சேர்ந்தவர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று மாயமானவர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த துயர சம்பவத்திற்கு அதிபர் முகமது புகாரி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதலும் தெரிவித்து உள்ளார். இந்த படகு விபத்து போன்று வருங்காலங்களில் வேறு சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படியும், ஆய்வு செய்யும்படியும் அவற்றுடன் தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கும் அதிபர் உத்தரவிட்டு உள்ளார்.
English Summary
76 killed in Boat capsizes in Nigeria