பிலிப்பைன்ஸ் : திடீர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட மினிபேருந்து - 8 பேர் பலி - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் ரிசால் மாகாணத்தில் ஆற்றில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால் மினி பஸ் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரிசால் மாகாணத்தில் டனாய் நகரில் 25 பயணிகளுடன் மினி பஸ் ஒன்று டனாய் நகரின் வடக்கு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஆற்றை கடக்க முயன்ற பொழுது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் மினி பஸ் அடித்த செல்லப்பட்டது.

இதையடுத்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழு பாதுகாப்பு படையினர் ஆற்றின் நடுவில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்திலிருந்து பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் இந்த விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 died as mini bus washed away due to flash flood in Phillipines


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->