கிரிமியா :: கட்டுமானத் தொழிலாளர்களின் தற்காலிக தங்குமிடத்தில் தீ விபத்து - 8 பேர் பலி - Seithipunal
Seithipunal


கிரிமியாவின் செவஸ்டோபோல் நகரில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கிருந்த தற்காலிக குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிரிமியாவின் துறைமுக நகரமான செவஸ்டோபோல் மற்றும் சிம்ஃபெரோபோல் நகரங்களை இணைக்கும் புதிய சாலையான டவ்ரிடா நெடுஞ்சாலையை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 100க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் தற்காலிக இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், கட்டுமான தொழிலாளர்கள் தங்குமிடத்தில் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தீ விபத்தானது மின் சாதன பொருட்களில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 killed in Fire breaks out at construction workers temporary shelter in Crimea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->