#புளோரிடா : ஹாலிவுட் கடற்கரை அருகே துப்பாக்கிச் சூடு - 9 பேர் காயம் - Seithipunal
Seithipunal


புளோரிடாவின் ஹாலிவுட் கடற்கரை அருகே நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள ஹாலிவுட் கடற்கரை பகுதியில் மாலை 6.15 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். இதில் 1 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளும், 25 முதல் 65 வயதுக்குட்பட்ட ஐந்து பெரியவர்களும் அடங்குவர்.

இதையடுத்து இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தப்பிச்சென்ற சந்தேக நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 injured in shooting beach in Hollywood Florida


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->