காஸாவில் புலம் பெயர்ந்து தவிக்கும் 90 சதவீதம் பேர்....அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஐ .நா!
90 percent of people who migrated to Gaza and suffered The UN released shocking information
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு, காஸாவிலிருந்து 90 சதவீதம் பேர் புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் போர் மூண்டது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்தது. இதில் குறிப்பாக காஸா பகுதியில் உள்ள மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மேலும் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை காஸா மீதான தாக்குதலை நிறுத்த போவது இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேலும் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 40 ஆயிரத்து 265-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடங்கியதில், காஸாவில் இருந்து 90 சதவீதம் பேர் தாங்கள் வசித்துவந்த பகுதிகளில் இருந்து புலம் பெயா்ந்து தவித்துவருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் , நோய்த் தடுப்பு திட்டங்கள் அங்கு செயல்படுத்த முடியாத காரணத்தினால், கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு முதல்முறையாக ஒரு குழந்தைக்கு போலியோ முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
90 percent of people who migrated to Gaza and suffered The UN released shocking information