13 வயதில் தந்தையான சிறுவன்... கையும் களவுமாக சிக்கிய ஆசிரியை கைது! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் பள்ளியில் படித்து வந்த மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு குழந்தை பெற்று கொண்ட ஆசிரியையை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அமெரிக்காவில் சவுத் ஜெர்சிக்கு உட்பட்ட வாரிங்டன் பகுதியை சேர்ந்த 34 வயதான இளம் பெண் லாரா கேரன், கேப் மே கவுன்டி பகுதியில் உள்ள மிடில் டவுன்ஷிப் பள்ளியில்  ஆசிரியை வேலை செய்து வருகிறார். அப்போது, அவருடைய வகுப்பில் படித்து வந்த சிறுவனான மாணவன் ஒருவனை வீட்டுக்கு அழைத்து சென்று தங்க வைத்து அந்த மாணவனுடன் பாலியல் உறவு கொண்டதில் கர்ப்பிணியானர் கேரன்,. பின்னர் குழந்தை பெற்றெடுத்தாள். தற்போது அந்த குழந்தைக்கு 5 வயது ஆகிறது .

 இந்நிலையில், இந்த குழந்தையும், சிறுவனும் உருவத்தில் ஒத்திருக்கின்றனர் என அதுபற்றிய பேஸ்புக் பதிவை பார்த்த சிறுவனின் தந்தை சந்தேகமடைந்து, போலீசில் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடந்தது. கேரனின் மாணவர்களில் அவருடைய மகனும் ஒருவன் என விசாரணையின்போது, அந்த தந்தை தெரிவித்து இருக்கிறார்.

இதையடுத்து இந்த விசாரணையில், சிறுவனின் தாயார் கேரனிடம் சிறுவனையும், சிறுவனின் சகோதரியையும் ஒன்றாக தங்க அனுமதித்து இருக்கிறார் என்பது தெரியவந்தது . இதன்படி, கேரனின் வீட்டிலேயே தங்கி, தூங்கி வந்திருக்கிறான்.  அப்போது சிறுவனுக்கு 13 வயது என கூறப்படுகிறது. கேரனுக்கு 28 வயது.

இதுகுறித்து சிறுவனின் சகோதரி போலீசிடம் கூறும்போது, நாங்கள் கேரனின் வீட்டில் வசித்தபோது, தூங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும்போது, கேரனின் படுக்கையில் சகோதரன் படுத்திருப்பான் என கூறினார். மேலும் சகோதரனுடன் கேரன் பாலியல் உறவில் ஈடுபட்ட விவரங்களையும் சகோதரி போலீசிடம் கூறும்போது நினைவுகூர்ந்துள்ளார்.

இதுபற்றிய ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.இதேபோன்று, ஆசிரியை கேரனின் குழந்தை தன்னுடையது என்று அந்த சிறுவன் போலீசிடகூறியிருக்கிறான். வாரத்திற்கு 2 முறை கேரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட தகவலையும் தற்போது 19 வயதுடைய சிறுவன் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடந்த விசாரணையிலும் அந்த  கூறியிருக்கிறான்.இதையடுத்து இந்த வழக்கில், ஆசிரியை கேரனை போலீசார் கைது செய்தனர்.

 சிறுவனின் நலனுக்கு தீங்கு ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கேரன் கைது செய்யப்பட்டார். பின்னர் கேப் மே கவுன்டி சிறையில் கேரன் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் சூழலில், சிறையில் இருந்து கேரன் நேற்று விடுதலையாகி உள்ளார். அமெரிக்காவில் பள்ளியில் படித்த மாணவனை, வீட்டில் தங்க வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டு, குழந்தை பெற்ற ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 13-year-old boy Teacher arrested for theft


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->