'இது அந்த படம்ல'... செல்போனே கதியென்று கிடந்த மகன்.. வித்தியாசமான தண்டனை கொடுத்த தந்தை! - Seithipunal
Seithipunal


இணையதளம் மற்றும் செல்போன்கள்  நம் வாழ்வில் இன்று ஒரு அங்கமாகி விட்டன நமது அன்றாட பணிகளில் தொடங்கி  வங்கி மற்றும் பண பரிவர்த்தனைகள் வரை அனைத்திற்கும் செல்போன்கள் மற்றும் இணையதளத்தின் தேவை என்று இமையாலாக இருக்கிறது.

ஆனால் சிறுவர்கள் இந்த செல்போன்களை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு அவற்றிற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். எப்போதும் செல்போன்களுடனே நேரத்தை செலவிடுவது அவர்களின் மூளை வளர்ச்சியையும்  உடல் நலத்தையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சீனாவைச் சார்ந்த தந்தை ஒருவர் செல்போனில் கேம் விளையாடிய மகனுக்கு நூதனமான தண்டனை ஒன்றை கொடுத்திருக்கிறார். அதுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

சீனாவில் உள்ள ஷென்சான் பகுதியைச் சார்ந்த ஹுவாங் என்பவர் தனது  11 வயது மகன் இரவு நேரத்தில் உறங்காமல்  செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை கண்டுபிடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவனுக்கு தண்டனையாக  தொடர்ந்து 17 மணி நேரம் வீடியோ கேம் விளையாட கட்டளையிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவனும் இரவு ஒரு மணியிலிருந்து மறுநாள் மாலை 6 மணி வரை தொடர்ந்து வீடியோ கேம் விளையாடி இருக்கிறான்.

ஒரு கட்டத்திற்கு மேல் அந்த சிறுவனுக்கு  வாந்தி வந்திருக்கிறது. அதன் பிறகு தான் அந்த சிறுவனை உறங்க அனுமதித்திருக்கிறார் அவரது தந்தை. அந்த சிறுவனும் இனி செல்போனில் வீடியோ கேமை தொடவே மாட்டேன் என  தந்தைக்கு எழுதிக் கொடுத்திருக்கிறான். அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அந்த தந்தை. இந்த செய்தியை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a chinese father gives an uniqu punishment for his son who played mobile video game


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->