அலுவலகத்தில் முத்தமிட்டு கொண்ட காதல் ஜோடி! பணியிடை நீக்கம்! - Seithipunal
Seithipunal


திருமணமான இருவரும் திருமணத்திற்கு புறம்பான தகாத உறவில் இருந்த நிலையில் பணி புரியும் அலுவலகத்தில் இருவரும் முத்தமிட்டு கொண்டனர். நிறுவன விதிகளை மீறியதாக இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மருந்து நிறுவன அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் லியூ என்ற நபருக்கும் சென் என்ற பெண்மணிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே இரண்டு பேரும்  திருமணமானவர்கள். இதனை தொடர்ந்து இருவரும் திருமணத்திற்கு புறம்பான தகாத உறவில் இருந்து வந்துள்ளனர். இதனை லியூவின் மனைவி கண்டுபிடித்து விட்டார். பின்னர் லியூ பணிபுரியும் நிறுவனத்தின் மேனேஜரிடம் இது தொடர்பாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பூதாகரமாக வெடிக்க, பணிபுரியும் லியூ அன்று வேலைக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளார். பின்னர் இந்த விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில் இருவரும்அலுவலகத்தில் வைத்து மாறிமாறி முத்தமிட்டு கொண்டனர், இதனால் மீண்டும் பெரிய பிரச்சனையை உருவாக்கியது.

இதனால், அந்த இருவரும் நிறுவன விதிகளை மீறியதாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பணிநீக்கத்தை எதிர்த்து அவர்கள் தனித்தனியாக சுமார் ₹3 லட்சம் நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A romantic couple kissing in the office Dismissal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->