திடுக்கிடும் சம்பவம்... பிறந்தநாள் பார்ட்டியில் துப்பாக்கிச்சூடு....28 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு சிறுமியின் பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் நாலு பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு இது ஒரு 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டாட் வில்லி என்ற பகுதியில் 16 வயது சிறுமி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அங்குள்ள நடன அரங்கம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக அங்கிருந்தவர்களிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றிருக்கிறது. தொடர்ந்து துப்பாக்கிகள் முழங்கும் சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ரஸ்ஸல்  மருத்துவமனையிலும் கிழக்கு அலபாமா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்காவைச் சார்ந்த உள்நாட்டு கால்பந்து வீரர் ஒருவரும் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A shooting incident at a 16 year old girl birthday party in the United States


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->