சவுதி பாலைவனத்தில் பிரம்மிக்க வைக்கும் நவீன கண்ணாடி மாளிகை...!
A stunning glass building in Saudi Arabia desert of
மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவின் வடமேற்குப் பாலைவனத்தில் பிரமிக்க வைக்கும் "மராயா" என்ற நவீன கண்ணாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. வெறும் இரண்டரை மாதத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் பூமியின் மிகப்பெரிய கண்ணாடி கட்டிடம் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
இந்த கண்ணாடி கட்டிடத்தை இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான ஜியோ பார்மா ஸ்டுடியோ மற்றும் பிளாக் இன்ஜினியரிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் பாலைவனத்தில் கண்ணாடியில் எதிரொலிப்பால் வெப்பம் அதிகரிக்காமல் இருக்க தாமிர பூச்சு கொண்ட கார்டியன் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலைவனத்தில் ஏற்படும் மணல் புயல் மற்றும் அதீத வெப்பத்தை தாங்கும் அளவுக்கு இந்த கண்ணாடிகள் வடிமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கட்டிடத்தினுள் 500 பேர் அமரக்கூடிய கச்சேரி அரங்கம், விருந்தினர் மாளிகை, நட்சத்திர உணவகம் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பாலைவனத்தில் பரந்து விரிந்த காட்சிகளை பார்த்து ரசிக்க கூடிய அளவுக்கு கட்டிடத்தின் மேற்கூரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் மராயா கட்டிடத்தினுள் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை ஒவ்வொரு மணித்துளியும் புதுவிதமான அனுபவத்தை வழங்க கூடிய அளவிற்கு தனித்துவமாக கட்டப்பட்டுள்ளது.
English Summary
A stunning glass building in Saudi Arabia desert of