கிரிமியா|| ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து - 7 போர் விமானங்கள் எரிந்து சேதம் என தகவல் - Seithipunal
Seithipunal


கிரிமியா ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 7 போர் விமானங்கள் எரிந்து சேதமானது என தகவல் வெளியாகி உள்ளன.

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமான தளத்தை, உக்ரைன் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கிரிமியாவின் ரஷ்ய விமான தளத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமான தளத்தில் நிலைகொண்டிருந்த ரஷ்ய போர் விமானங்கள் தீக்கிரையாகின.

இதில் 7 விமானங்கள் எரிந்து சேதமடைந்ததாகவும், ஒருவர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் விமான தளத்தில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்ததால் ராணுவ விமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ள நிலையில், உக்ரைனிலிருந்து நீண்ட தூர ஏவுகணைகள் ஏவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A terrible explosion at a military base in Crimea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->