மீண்டும் ஒரு வர்த்தக போர்?வரிக்கு.. வரி.. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.!
A trade war again? Tax.. China retaliates against the United States
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீனா தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு 15 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடுகளான கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரியும் விதித்தார் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்டு டிரம்.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உத்தரவால் உலக அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் வரி விதிப்பை எதிர்கொண்ட நாடுகள், டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றத் தொடங்கி விட்டன.
மெக்சிகோ மற்றும் கனடா மீதான வரி விதிப்பை மட்டும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார் டிரம்ப்.
டிரம்பின் வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாகஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார் டிரம்ப், மேலும் அதாவது, புலம்பெயர்ந்தோர் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்க இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து, அமெரிக்கா சற்று பின்வாங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால்,இந்தநிலையில் சீனா மீதான வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.இதனால் தற்போதுள்ள வரிகளுக்கு மேல் கூடுதலாக 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீனா தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு 15 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளது. மேலும் எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 10 சதவீத வரியை விதித்துள்ளது மோதல் போக்கை காட்டுகிறது.
மேலும் சீனாவின் சந்தை ஒழுங்குமுறை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விதிமுறைகளை மீறிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இதன்மூலம் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையே மீண்டும் ஒரு வர்த்தக போர் ஏற்படலாம் என கருதப்படுகிறது.
English Summary
A trade war again? Tax.. China retaliates against the United States