தீக்குழம்புடன் வெடித்து சிதறிய எரிமலை!...இந்தோனேசியாவில் 9 பேர் பலி! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் திடீரென்று வெடித்து சிதறிய எரிமலை காரணமாக, 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டில் நுசா டெங்கரா மாகாணம் அமைந்துள்ளது. அங்குள்ள பிளோர்ஸ் தீவில் எரிமலை உள்ளது. இந்த நிலையில், இந்த எரிமலை நேற்று இரவு திடீரென்று வெடித்து சிதறியது. இதன் காரணமாக, எரிமலையில் இருந்து வெளிவந்த கரும்புகை, அப்பகுதியில் உள்ள கிராமங்களை  சூழ்ந்தது. மேலும், எரிமலையில் இருந்து தீக்குழம்பும் வெளியேறியதால், அப்பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.

எரிமலை வெடித்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த எரிமலை வெடிப்பால், சிலர் காயமடைந்த நிலையில், இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டனர்

அதே சமயத்தில், தொடர்ந்து எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திடீரென்று வெடித்து சிதறிய எரிமலை காரணமாக, 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A volcano erupted with lava 9 people died in lndonesia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->