பாகிஸ்தான் பிரதமர் வீட்டிற்குள் ஊடுருவிய ஆப்கானிஸ்தான் நபர் கைது..!
Afghan man arrested for intrudes into Pakistan PM House
பாகிஸ்தான் பிரதமர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஆப்கானிஸ்தான் சேர்ந்த நபரை கைது செய்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் ஷபாஷ் ஷெரீப்பின் இல்லத்திற்கு, நேற்று முன்தினம் பலத்த பாதுகாப்பையும் மீறி மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதையடுத்து வீட்டின் ஒரு பகுதியில் பதுங்கி இருந்த மர்ம நபரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து விசாரணை செய்ததில், அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்பதும், அவர் மூன்று வெவ்வேறு பாதைகள் வழியாக பிரதமர் வீட்டிற்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த நபர் யார்? எதற்காக பிரதமர் வீட்டிற்குள் நுழைந்தார்? என்று பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பலத்த பாதுகாப்பையும் மீறி பிரதமர் வீட்டிற்குள் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Afghan man arrested for intrudes into Pakistan PM House