ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு.. 9 பேர் பலி.. 13 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் மசூதிக்கு அருகில் உள்ள பள்ளியில் குண்டுவெடித்து, 33 ஷியா பக்தர்கள்  உயிரிழந்த நிலையில், இன்றும் குண்டு வெடித்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று வடக்கு பகுதியில் 2 இடங்களில் வெடிகுண்டு வெடித்ததில் 50 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் ஷியா பிரிவினர் வசிக்கும் பார்க மாகாண தலைநகர் மசார்-இ-ஷரிபில் இரண்டு வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் தாலிபான்கள் படையினர் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan bomb blast 9 persons death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->