மீண்டும்... மீண்டுமா..!!! இன்றும் மியான்மரில் நிலநடுக்கம்...! ரிக்டரில் 5.1 மக்கள் பீதி!!!
Again Earthquake Myanmar today 5POINT1 on the Richter scale
அமெரிக்க நிலநடுக்கவியல் மையம்,மியான்மர் நாட்டின் இரண்டாவது பெரிய நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் தெருக்களில் மக்கள் இந்த நிலநடுக்கத்தைக் கண்டு அலறினர்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மியானமரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, மேலும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
இதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600 ஆக உயர்ந்துள்ளது மேலும் 3,400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
English Summary
Again Earthquake Myanmar today 5POINT1 on the Richter scale