உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா நியமனம்.!
Ajay Banka appointed as the new President of the World Bank
அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமை இடமாக கொண்டு இயங்கும் உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் பதவி விலகியதை தொடர்ந்து அடுத்த தலைவராக எந்தவித போட்டியுமின்றி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றி வரும் ஜூன் மாத தொடக்கத்தில் உலக வங்கியின் புதிய பொறுப்பை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அஜய் பங்கா உலக வங்கியின் தலைவராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் ஜோ பைடன் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அஜய் பங்காவின் பெயரை முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ajay Banka appointed as the new President of the World Bank