உயிரினங்களின் இயற்கை தேர்வு பற்றி கோட்பாட்டை வெளியிட்டவர் பிறந்த தினம் இன்று.!!
alfred russel wallace birthday 2022
ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் :
உயிரினங்களின் இயற்கைத் தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவரான ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் 1823ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் அஸ்க் நதி அருகில் உள்ள கென்சிங்டன் காட்டேஜ் என்ற இடத்தில் பிறந்தார்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். பின்பு சுயமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டார். 1844ஆம் ஆண்டு லீசெஸ்டர் பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்தது. அங்கு ஹென்றி வால்டர் பேட்ஸ் என்பவரை சந்தித்தார். இருவருமே முறையான பள்ளிப் படிப்பை பெறாதவர்கள், சுயமாக கற்றவர்கள், வண்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
வாலஸ் தனியாக பயணம் மேற்கொண்டு, போகும் இடங்களில் எல்லாம் ஏராளமான தாவரங்கள், விலங்கினங்களின் மாதிரிகளை சேகரித்தார். 1852ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு திரும்பி வரும் வழியில் தீ விபத்து ஏற்பட்டதால், சேகரித்து வைத்திருந்த மாதிரிகளும் கப்பலோடு போய்விட்டது.
நாடு திரும்பியவர் 2 ஆண்டுகள் தனது அனுபவங்கள் குறித்து கட்டுரைகள் எழுதுவதில் செலவிட்டார். எட்டு வருடங்கள் தொடர்ந்து பறவைகள், பாம்புகள், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள், பட்டாம்பூச்சிகள், வண்டுகள் என 1,25,000-க்கும் அதிகமான மாதிரிகளை சேகரித்தார்.
உயிரி புவியியலின் தந்தையாக போற்றப்படும் ஆல்ஃப்ரெட் வாலஸ் 1913ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
alfred russel wallace birthday 2022