ஏலியன்ஸ் கண்காட்சி - மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்ஸிகோ அரசு.!  - Seithipunal
Seithipunal


ஏலியன்ஸ் கண்காட்சி - மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்ஸிகோ அரசு.! 

உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதுபோல், வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா? மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா? என்பது குறித்த ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. 

அதிலும் குறிப்பாக வேற்று கிரகவாசிகளான ஏலியன்கள் இருப்பது உண்மையா? அல்லது பொய்யா? என்பது குறித்த விஷயங்கள் தற்போது வரை ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், "மெக்சிகோ நகரில் ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மெக்சிகோ அரசு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தக் கண்காட்சியில் இரண்டு ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 

அந்த உடல்கள் மனிதர்களைப் போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என்று தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையே இந்த ஏலியன் தொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும், இந்த ஏலியன்ஸ் கண்காட்சி மக்களிடம் வேற்றுக் கிரகவாசிகள் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aliens Exhibition in mexico


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->