இங்கிலாந்தில் 18 வயது வரை அனைவரும் கணிதம் படிக்க வேண்டும் - பிரதமர் ரிஷி சுனக்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், புத்தாண்டு தினத்தன்று முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் 18 வயது வரையில் உள்ள இங்கிலாந்து மாணவர்களுக்கு கணித படிப்பை கட்டாயப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "இன்றைய உலகில் எல்லா இடங்களிலும் வேலைகளுக்கு தரவுகளும், புள்ளி விவரங்களும் முக்கியமான ஒன்றாகி விட்டது. அதனால், நமது குழந்தைகளின் வேலைகளுக்கு எப்போதும் இல்லாத அளவில், கூடுதல் அளவிலான பகுப்பாய்வு திறன் தேவைப்படும். 

இந்த திறன்கள் இல்லாமல், நமது குழந்தைகள் வெளி உலகத்திற்குச் சென்றால், அவர்களை நாம் கீழே விழச் செய்வதாகத்தான் கருத வேண்டும். ஆனால் இங்கிலாந்தில் 16 முதல் 19 வயது வரையிலானவர்களில் நூறு சதவீதத்தில் பாதிப்பேர்தான் கணிதத்தை படிக்கின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

all students study maths in ingland president rish sunak allounce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->