இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் - அமெரிக்கா கடும் கண்டனம் - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் இந்திய தூதருக்கு மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதான்ட் படேல், எதிர்ப்பு தெரிவிக்கும் தனிநபர்களின் உரிமையை அமெரிக்கா ஆதரிக்கும் அதே வேளையில், சமீபத்திய ஆர்ப்பாட்டங்களின் வன்முறை சம்பவங்களை கண்டிக்கிறது.

வியன்னா ஒப்பந்தக் கடமைகளுக்கு இணங்க, அமெரிக்காவில் உள்ள தூதரகங்கள், அதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்து கோவில்களை சிதைத்தும், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America condemns attack by Khalistan supporters on Indian Embassy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->