அமெரிக்க துணை அதிபர் சீனா அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை.!
America Vice President met with the President of China and held talks
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் இருவரும் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டது. மேலும் இது தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் கமலஹாரிஸ் டுவிட்டரில், ஜி20 மாநாட்டின் போது அமெரிக்கா அதிபர் ஜோப் பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அப்பொழுது அமெரிக்கா-சீனா இடையே நிலவும் போட்டியை பொறுப்புடன் கையாள வேண்டும் என்றும், இருநாடுகளுக்கிடையே ஆக்கபூா்வமான தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும் என்று ஜின்பிங்கிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த ஒருமித்த கருத்தையே சீன அதிபர் ஷி ஜின்பிங்ஙிடம் தானும் வலியுறுத்தியதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
America Vice President met with the President of China and held talks