அல்-கொய்தா தலைவர் மரணம்: வெளிநாடு செல்லும் அமெரிக்கர்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பதுங்கியிருந்த அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி மீது அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல்-ஜவாஹிரியின் கொலைக்கு பழித்தீர்க்கும் விதமாக அமெரிக்கர்கள் மீது தாக்குதல்கள் நடத்த அச்சுறுத்தல் இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அல்-கொய்தாவின் ஆதரவாளர்கள் மற்றும் அதனுடன் இணைந்த பயங்கரவாத அமைப்புக்கள், அமெரிக்க அமைப்புகள், பணியாளர்கள் மற்றும் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்படலாம்.

எனவே அமெரிக்க குடிமக்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அதிக விழிப்புணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உள்ளூர் செய்திகளைக் கண்காணிக்கவும், அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகத்துடன் தொடர்பிலும் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

எனினும் அவசரகாலத்தில் அமெரிக்க குடிமக்களை கண்டறிவதை எளிதாக்குவதற்கு ஸ்மார்ட் டிராவலர் என்ரோல்மென்ட் திட்டத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American embassy asked american citizens to stay safe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->