அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்!
American embassy Missile attack
ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடங்கிய பிறகு சிறிய வகை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
இருப்பினும் அமெரிக்க தூதரகத்தில் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பாக தூதராக செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது, அமெரிக்க தூதரகத்தில் அதிகாலை 4.15 மணிக்கு தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து மதிப்பிட்டு வருகிறோம். இந்த தாக்குதலால் யாரும் காயமடையவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, காட்யுஷா வகையைச் சேர்ந்த 14 ஏவுகணைகள் அமெரிக்க தூதரகத்தை நோக்கி சரமாரியாக வீசப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனால் ஈரான் ஆதரவு ஆயுத குழுவினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
English Summary
American embassy Missile attack