அப்படி ஒரு காரணத்தால், குடும்பத்தில் 7 பேரை கொன்று தற்கொலை செய்த கணவன்.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் 42 வயதான மைக்கேல் ஹெட் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் மனைவி மனைவியின் தாய் மற்றும் இவர்களது ஐந்து குழந்தைகள் உள்ளிட்டோர் வசித்து வந்துள்ளனர். 

நேற்று, இவர்கள் வீட்டில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த எட்டு பேர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கணவர் மைக்கேல் நடவடிக்கைகள் பிடிக்காமல் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார். இதற்கு மைக்கில் சம்மதிக்காமல் பலமுறை மனைவியிடம் கெஞ்சி கெஞ்சி பார்த்துள்ளார். ஆனால், மனைவி மிகவும் உறுதியாக விவாகரத்து முடிவில் இருந்ததால் குழந்தைகள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று நினைத்து இப்படி ஒரு விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். 

நள்ளிரவு நேரத்தில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களது அறைக்கு சென்று மைக்கேல் சரமாரியாக அனைவரையும் துப்பாக்கி சூடு நடத்தை கொலை செய்துள்ளார். கடைசியில் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American Husband killed 7 of Family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->