பரபரப்பு! தேசிய கோடி எரிப்பு! வெடித்த போராட்டம்! உருவ பொம்மைகள் எரிப்பு! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா வந்த நேதன்யாவுக்கு எதிராக போராட்டம் வெடித்த நிலையில் அமெரிக்க தேசிய கொடி ஏரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களாக இஸ்ரேல் காசா நகர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலில் இதுவரையில் 39 ஆயிரத்து 175 பாலதீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 90,000 மேற்பட்ட மக்கள் காயமடைந்து கை, கால்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலதீன தாக்குதல் ஆபத்தான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க நேற்று முன் தினம் அமெரிக்கா வந்தார்.

அமெரிக்கா வந்த இஸ்ரேஸ் பிரதமர் நேதன்யாகுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டக்காரர்கள் கையில் பாலஸ்தீன கொடியை கையில் ஏந்தியபடி  இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நேதன்யாகு மீது உள்ளே ஒளிந்து கொள்ள முடியாது நீ செய்தது இனப்படுகொலை என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கடுமையான அடக்குமுறைகளை உபயோகப்படுத்தியது. இதனால்  ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் அமெரிக்கவில் நேதன்யாகுவின் உருவம் போராட்டக்காரர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் ரத்தத்துடன் ஜோ பைடன் படங்களை போராட்டத்தில் பங்கேற்ற கலைஞர்கள் வரைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதுவரையில் 200க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க தேசிய கோடி எரிப்பு நாட்டு பட்டின்மையை காட்டுவதாக துணை அதிபர் கமல ஹாரிஸ் இந்த போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில்  ஜோ பபைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நேதன்யாகு சந்திச்சு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American national flag was burned while the protest broke out against Netanyahu who came to the United States


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->