அமெரிக்கா | இந்திய வம்சாவளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை? இரண்டாவது முறை கைது! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் வக்கீலாக இருந்தவர் 2.7 மில்லியன் டாலர் பணமோசடி செய்ததால் போலீசார் கைது செய்தனர்:

இந்திய வம்சாவளில் வந்த அபிஜித் தாஸ் (வயது 50), அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வடக்கு அண்டோவர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவில் வக்கீலாக பணியாற்றி வந்தார். 

இவர் வக்கீலாக இருந்த போது சிலரிடம் பணமோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்ததால், போலீசார் அபிஜித் தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் இவர் தன்னிடம் வழக்கு தாக்கல் செய்ய வருபவர்களின் வங்கி கணக்கில் இருந்து 2.7 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 கோடி) அவரது வங்கி கணக்கில் மாற்றியது தெரிய வந்தது.

இந்நிலையில் அபிஜித்தை போலீசார் பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதால் இவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.2 கோடி அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் பிரசார விதிகளை மீறியதாலும், தவறான தேர்தல் அறிக்கை தாக்கல் வெளியிட்ட குற்றங்களுக்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amerika arrests Indian


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->