பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு: உதவ முன்வந்த ஆப்பிள் நிறுவனம்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் இயற்கை பேரிடருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய தயாராக இருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் டிம் குக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை 1100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும், லட்சக்கணக்கான மக்கள் தங்களது குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் டிம் குக், பாகிஸ்தானின் இயற்கை பேரிடருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது,

"பாகிஸ்தானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ளும்". என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் டிம் குக்கின் இந்த அறிவிப்புக்கு நோபல் வெற்றியாளரும், பெண் கல்வி ஆர்வலருமான மலாலா நன்றி தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apple company help to Pakistan flood


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->